சிகாகோ தமிழ்ச் சங்க வரலாறு
1969 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சிகாகோ தமிழ்ச் சங்கம் தன்னலமற்ற தொண்டர்களாலும், தமிழ் அன்பர்களாலும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர்களையும், ஆளுமைகளையும், அறிஞர்களையும் சிகாகோ தமிழ்ச் சங்கம் சிறப்பித்து வருகிறது. அன்னைத் தமிழிற்கு உலகப் புகழும் பெருமையும் தேடித் தரும் மாநாடுகளை நடத்தி வருகிறது. அரும்பெரும் தமிழ்க் கலைகளை இளையோர்களுக்கும் அமெரிக்க மண்ணில் வாழும் பிற இன மக்களுக்கும் பரப்பும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
தடம் பதித்த தங்க நிகழ்வுகள்
1969
ஆகஸ்ட் 16 ஆம் நாள் சிகாகோவில் இருக்கும் தமிழர்கள் ஒன்றுகூட சங்கம் பிறக்க விதையிடுதல்
1969
செப்டம்பர்: பாரதியார் பண்பாட்டு மன்றம் என்கிற பெயரில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது
1970
சனவரி: முதல் பொங்கல் விழா, சிகாகோ பல்கலைக்கழகத்தின் “பன்னாட்டு அரங்கில் ” நடைபெற்றது
1970
ஏப்ரல்: சிறப்பு விருந்தினர்: தமிழ் நாட்டின் அன்றைய அமைச்சர் மாண்புமிகு நாவலர் இரா. நெடுஞ்செழியன்
1972
சிறப்பு விருந்தினர்: தமிழ் நாட்டின் அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி
1974
சிறப்பு விருந்தினர்: தமிழ் நாட்டின் மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் எம்.ஜி.ஆர்
1981
இசை நிகழ்ச்சி: இசைமாமணி சீர்காழி கோவிந்தரசஜன் , கலைமாமணி சீர்காழி சிவசிதம்பரம்
1981
அக்டோபர்: சிகாகோவில் கவியரசு கண்ணதாசன் மறைவு . “கவிஞர் கண்ணதாசன் நினைவு நிதி ” ஏற்படுத்துதல்
1981
“ஆயுட்கால உறுப்பினர்களை ” சேர்க்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
1981
“தமிழ் ஒலி ” என்ற பெயரில் கற்பனை வளமும் கருத்தும் கொண்ட முதல் செய்தி மலர் வெளியிடப்பட்டது.
1984
இயல்,இசை மற்றும் நாடகம் வளர்க்க “முத்தமிழ் விழா” நிகழ்ச்சி முதல் முறையாகத் துவக்கப்பட்டது
1984
பொதுக்குழுவில் “பாரதி பண்பாட்டு மன்றம்” என்பதை “சிகாகோ தமிழ்ச் சங்கம் ” என்று பெயர் மாற்றம்
1987
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை துவக்கப்பட்டது- இலினாய் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டது.
1988
சிறப்பு விருந்தினர்: தமிழ்த் திரையின் நடிப்பரசி ‘ஆச்சி’ மனோரமா அவர்கள் கலந்து கொண்டார்.
1988
அமெரிக்க இந்திய தூதரகத்து நேரு பிறந்த நாள் விழாவில் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள்
1988
முத்தமிழ் விழா: பேராசிரியர் இலிண்ட்டு யோம் அவர்கள் அழகு தமிழில் “தமிழ் இலக்கணம் ” பற்றிய பேச்சு
1988
இலங்கையில் வறுமையில் வாழும் தமிழர்களின் நலம் பேண முதல் ஈழத்தமிழர் உதவி நிதி சேர்க்கப்பட்டது
1988
சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் தமிழ் கற்கும் ஆர்வமுள்ள இளையோர்களுக்கும் இலகிரேஞ்சில் தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பம்.
1989
மருத்துவர். சேவியர் உரோசு, ஐங்கரன் மற்றும் சிகாகோ கலைஞர்களின் இசைவிருந்து
1989
சிறப்பு விருந்தினர்: பட்டிமன்றங்களின் தலைச்சிறந்த ஆளுமை பத்மஸ்ரீ பேராசிரியர் சாலமன் பாப்பையா
1989
சிறப்பு விருந்தினர்: சிறந்த பாடலாசிரியரும் தமிழ் கவிஞருமான வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டார்
1989
சீர்மிகு சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் “இருபதாம் ஆண்டு” நிறைவு விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
1991
சிறப்பு விருந்தினர்:தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெற்ற தவத்திரு குன்றக்குடி அடிகளார்
1991
“கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை” அமைக்க நிதி திரட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1992
சிகாகோவில் வட அமெரிக்கக் கூட்டுத்தமிழ்ச்சங்கத்தின் தமிழ் விழா சிறப்புடன் நடைப்பெற்றது.
1992
சிறப்பு விருந்தினர்: மாண்புமிகு நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் சாலமன் பாப்பையா
1992
சிறப்பு விருந்தினர்: தமிழறிஞர், எழுத்தாளர், மற்றும் பேச்சாளர் டாக்டர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் கலந்து கொண்டார்
1993
சிறப்பு விருந்தினர்: தமிழறிஞர், கவிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் கலந்து கொண்டார்
1994
சீர்மிகு சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் “வெள்ளி விழா” பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது.
1994
சிறப்பு நாடகம் : ச. வி. சேகர் அவர்களது சிறப்பு நகைச்சுவை நாடகம் நடத்தப்பட்டது
1994
வட அமெரிக்கக் கூட்டுத்தமிழ்ச்சங்கம் “வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை” எனப் பெயர் மாற்றம் பெற்றது
1999
சிறப்பு நாடகம் : கிரேசி மோகன் அவர்களது சிறப்பு நகைச்சுவை நாடகம் நடத்தப்பட்டது
1999
சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் சிற்சபேசன் , பேராசிரியர் மு. மேத்தா , கவனகர் திருக்குறள் கனக சுப்புரத்தினம்
2001
சிறப்பு விருந்தினர்: தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமாகிய பாவலர் “அறிவுமதி” அறிவுமதி அவர்கள் கலந்து கொண்டார்
2003
சிறப்பு விருந்தினர்: முன்னாள் இந்திய நிதி அமைச்சர் ப . சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டார்.
2003
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் முனைவர் எம்.எஸ். உதய மூர்த்தி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்
2004
சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு அறக்கட்டளையின் 30 ஆம் ஆண்டு விழா சிறப்புடன் நடைபெற்றது
2005
தமிழ் நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்கு நிதி திரட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, துயரில் வீழ்ந்தோர்க்கு வழங்கப்பட்டது.
2005
சிறப்பு விருந்தினர்: தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்,பேராசிரியர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட கவிஞர் மு. மேத்தா
2006
சிறப்பு பட்டிமன்றம்: பேராசிரியர் சாலமன் பாப்பையா , இராசா , பாரதி பாஸ்கர் அவர்கள் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி
2007
சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு அறக்கட்டளையின் 32 ஆம் ஆண்டு விழா சிறப்புடன் நடைபெற்றது
2008
சிகாகோவில் வாழ்கின்ற தமிழர்களின் எழுத்தாற்றலை வெளிப்பெடுத்தும் “பலகை” செய்தி மலர் துவக்கம்
2010
சிறப்பு இசை நிகழ்ச்சி: இலட்சுமன் சுருதி குழுவினர் வழங்கிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது
2010
சிறப்பு விருந்தினர்: தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை அவர்கள் கலந்து கொண்டார்.
2012
சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் ஞான சம்பந்தன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்
2013
சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்
2013
அமரர் கல்கியின் – பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற்றம் பெற்றது
2013
சிறப்பு விருந்தினர்: விசயா பாரதி (பாரதியார் பேத்தி) அவர்கள் கலந்து கொண்டார்
2014
சிறப்பு விருந்தினர்: கலைமாமணி கங்கை அமரன் அவர்களது இசை நிகழ்ச்சி நடைபெற்றது
2014
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 45 ஆம் ஆண்டு-தமிழ்நாடு அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு விழா சிறப்புடன் நடைபெற்றது
2015
சிறப்பு விருந்தினர்: திண்டுக்கல் இலியோனி அவர்களது தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது
2015
சிறப்பு நிகழ்ச்சி: சன் தொலைக்காட்சி “கல்யாண மாலை” நிகழ்ச்சி சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் நடத்தப்பட்டது
2015
தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிதி திரட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது
2016
சிறப்பு விருந்தினர்: பூர்ணிமா மற்றும் பாக்யராசு அவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது
2016
நாளைய தலைமுறைக்காக சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இளையோர் அணி அமைக்கப்பட்டது
2016
உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் “தமிழ் இருக்கை” அமைய நிதி திரட்டல்
2016
சிறப்பு விருந்தினர்: நெல்லை கண்ணன் அவர்களது தலைமையில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது
2017
தமிழ்நாடு அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா
2018
மாற்றுத் திறனாளிகள், கோமகனின் “ராகப்பிரியா இசைக்குழு”வின் இசை நிகழ்ச்சி முத்தமிழ் விழாவில் இடம்பெற்றது
2018
சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் சுப. வீரபாண்டியன் , திருவாட்டி உல்ரிக் நிக்லோசு கலந்து கொண்ட இலக்கிய மாலை
2019
முப்பெரும் விழா – சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் “பொன்விழா” – பேரவையின் “தமிழ் விழா” – சிறப்புடன் நடைபெற்றது
2019
முப்பெரும் விழா – வட அமெரிக்க மண்ணில் பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சீரும் சிறப்புடனும் நடத்தப்பட்டது
2019
தமிழ்நாட்டின் அன்றைய துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்ட குழந்தைகள் நாள்
2020
புதிதாக நிறுவப்பட்ட அய்யன் வள்ளுவர் சிலை முன்பு – முதல் “திருவள்ளுவர் நாள்”
2021
தமிழின் தலைச் சிறந்த அறிஞர்களைப் போற்றும் “தமிழ் அறிஞர்கள் நாள்” அறிமுகப்படுத்தப்பட்டது
2022
கோடை விழா “உவகை” என்று பெயர் பெற்று அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் மாற்றம் பெற்றது
2022
சிறப்பு விருந்தினர்: முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழ் அறிஞர்கள் நாள் விழாவில் சிறப்புரையாற்றினார்
2023
சிறப்பு பட்டிமன்றம்: இராசா , பாரதி பாஸ்கர் அவர்கள் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி
2023
சிறப்பு விருந்தினர்: சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் அவர்கள் பங்கேற்ற இலக்கிய மாலை
2024
திருக்குறளின் பெருமையைப் பறைச்சாற்றும் “ஐந்தாவது உலகத்திருக்குறள் மாநாடு”
2024
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுடன் -“வணக்கம் அமெரிக்கா”
2025
அமெரிக்க மண்ணின் “முதல் திருவள்ளுவர் நாள்” சாற்றானை இலினாய் மாகாண ஆளுநரிடம் இருந்து பெறப்பட்டது.
2025
சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் சுப. வீர பாண்டியன், புலவர் செந்தலை கவுதமன், மக்கள் கலைஞர்கள் – கோபி, சுதாகர், முத்துக்குமரன்
2026
இலினாய் பல்கலைக் கழகத்தில் (அர்பனா சேம்பெய்ன்) “தமிழ்க்கல்வி” துவங்க “விதை நிதி” திரட்டப்பட்டது.
2026
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் சாம்ராஜ், தமிழ் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான்
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். (குறள்:457)
