தமிழ் கற்க முனைகின்ற இளம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துகள். “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்” என்று ஒப்பற்ற நோக்கம் நிலைபெற பணியாற்றிடும் அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகங்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் – கல்விக் கழகம்
1987 ஆம் ஆண்டு முதல் வடமேற்கு பல்கலைகழகத்தில் துவங்கப்பட்டு, தமிழ் கற்க முனைகின்ற இளம் மாணவர்களுக்கு ஓர் கலங்கரை விளக்காக “அமெரிக்க தமிழ்ப் பள்ளிகள்” இயங்கி வருகின்றன. 1988 ஆம் ஆண்டு சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் இலக்ரேஞ்சு பள்ளி செயல்பட துவங்கி, இன்று, பரந்து நிற்கும் ஆலமென விழுதுவிட்டு தாய்மொழிக்கல்வியைத் தாங்கி நிற்க அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் இன்று ஏழு நகரங்களில் இரு வாரத்திற்கு ஒரு வகுப்பு என வார இறுதி நாட்களில் இயங்கி வருகின்றன. மாணவர்களின் திறனுக்கும் ஆர்வத்திற்கும் உரம் அளிக்கும் வகையில் நிலைகள், பாடத்திட்டங்கள் வகுத்து, கல்விக் கழகமாக, நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றது.
- இடேரியன் தமிழ்ப்பள்ளி – சிகாகோவின் மேற்கில் இடேரியன் நகரம், இல்லியனாய்சு மாநிலத்து அமைந்துள்ளது.
- இடெசுபிளெய்ன்சு தமிழ்ப்பள்ளி – சிகாகோவின் வடமேற்கில் இடெசுபிளெய்ன்சு நகரம், இல்லினாய்சு மாநிலத்து அமைந்துள்ளது.
- கெர்ணி தமிழ்ப்பள்ளி – சிகாகோவின் நேர் வடக்கில் கெர்ணி நகரம், இல்லியனாய்சு மாநிலத்து அமைந்ததுள்து.
- மில்வாக்கித் தமிழ்ப்பள்ளி – மில்வாக்கியின் புறநகர் பகுதியான – பீவாக்கி நகரம், விசுகான்சின் மாநிலத்து அமைந்ததுள்ளது.
- மன்சுடர் தமிழ்ப்பள்ளி – மன்சுடர் நகரம், இந்தியானா மாநிலத்து வடமேற்கு பகுதியில் அமைந்தது.
- நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி – சிகாகோவின் மேற்கில் நேப்பர்வில் நகரம், இல்லியனாய்சு மாநிலத்து அமைந்துள்ளது.
- சாம்பர்க்கு தமிழ்ப்பள்ளி – சிகாகோவின் வடமேற்கில் சாம்பர்க்கு நகரம், இல்லினாய்சு மாநிலத்து அமைந்துள்ளது.
