இளையோர் குழு
இளையோர்கள் எதிர்காலத்தின் தலைவர்கள் மட்டுமல்லாது, இன்றைய சமுதாய மேம்பாட்டிற்கும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குபவர்களாக உள்ளனர். இளையோர்களின் பங்களிப்பு வரலாற்று காலந்தொட்டே முன்னிலையிலும் உள்ளது. அவர்களது கற்றலையும் திறனையும் உள்வாங்கி சமுதாயம் மேம்படவும், அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்கின்ற வகையில் செயல்படும் துணை அமைப்பு “இளையோர் குழு.”
இளையோர் குழுவினர் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து சமூகப்பணியாற்றி வருகின்றனர். நற்பணிகளான வறியோர்க்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி, பெருஞ்சாலைகளை தூய்மை செய்கின்ற திட்டம் ஆகியவற்றில் இளையோர் குழு பங்களித்து வருகின்றனர். சிகாகோ தமிழ்ச் சங்கம் நடத்துகின்ற பல்வேறு விழாக்களில் இளையோர் குழுவினர் பங்களித்து வருகின்றனர். விழாக்களின் வாயிலாக மக்கள் தொடர்பு, ஒருங்கிணைப்பு, மரபு விழுமியம் ஆகியவற்றை அறிந்து கொள்கின்றனர்.
இளையோர் குழுவில் உறுப்பினர்களுக்கான நெறிகள்:
- 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் அல்லது ஆண்டு உறுப்பினர், குடும்பத்தினராக இருக்க வேண்டும் அல்லது மாணவர் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- உறுப்பினர் அல்லாத இளையோர் தன்னார்வலர்களாக பணியாற்றலாம்.
சிகாகோ தமிழ்ச் சங்கம் இளையோர் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ஆண்டின் இறுதியில் பணியாற்றிய நேரத்திற்கான சான்றிதழை வழங்கி வருகிறது. அனைத்து இளையோர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக!
இளையோர் குழுவில் பங்கேற்க இன்றே வருக! நாளைய உலகை நன்கே அமைப்போம் வருக!
