மரபுக்கலைகள் – பயிற்சி வகுப்புகள்
மனிதனது உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும். கலைகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டு வாழ்க்கையை வேரூன்றி பிரதிபலிக்கின்றன. கலை பல்வேறு நோக்கச் செயற்பாடுகளுக்காக தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டது.
சிகாகோ தமிழ்ச் சங்கம், நமது பண்பாட்டு கூறுகளை வெளிப்படுத்தும் கலைகளை கற்று கொள்ளும் நோக்கத்திலும் அடுத்த தலைமுறையினருக்கு கலைச் செல்வத்தை கடத்தும் நோக்கத்திலும் அமெரிக்க மண்ணில் நம்முடன் வாழகின்ற பிற இனத்தவர்களிக்கு நம் கலைகளை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் “மரபுக்கலை பயிற்சி” வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் தமிழ் நாட்டின் தேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன.
சிகாகோ தமிழ்ச் சங்கம் நடத்தும் விழாக்கள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் நடத்தும் விழாக்களின் அரங்குகளில மரபுக் கலைகள் அவையேற்றம் செய்யப்பட்டு வருகிறது. காண்போர் களிப்புடன் பாராட்டி வருகின்றனர்.
சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் பின்வரும் மரபுக்கலை பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழர் மரபுக் கலைகளின் மீது நாட்டம் கொண்ட அனைவரையும் இந்த வகுப்புகளில் இணைந்து பயன்பெற வரவேற்கின்றோம்.
| பறை | சிலம்பம் |
| ஒயிலாட்டம் | தேவராட்டம் |
Join Today
Weekly classes are delivered online—in-person practice sessions are scheduled regularly for events. Send your inquiries to know more about schedules and fees or any to secretary@chicagotamilsangam.org.
