அமெரிக்க மண்ணில் தொடங்கப்பட்ட முதன்மையான சிகாகோ தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்து நடத்திய பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் தமிழிற்கு தமிழர்க்கும் பங்களிப்பை பாராட்டியுள்ளனர். 1969 ஆம் ஆண்டு முதல் சிறப்பித்த தமிழ்நாடு முதல்வர்கள்:

1972

1972 ஆம் ஆண்டு மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.கருணாநிதி அவர்கள் சிகாகோ தமிழ்ச் சங்கத்தை சிறப்பித்தார்.

புகைப்படம்: மாண்புமிகு மேனாள் முதல்வர் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு விருந்து

1974

1974 ஆம் ஆண்டு மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் சிகாகோ தமிழ்ச் சங்கத்தை சிறப்பித்தார்.

புகைப்படம்: மாண்புமிகு மேனாள் முதல்வர் அவர்களுடன் சிகாகோ தமிழ் குடும்பம்

2019

2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் சிகாகோ தமிழ்ச் சங்கத்தை சிறப்பித்தார்.

புகைப்படம்: மாண்புமிகு மேனாள் முதல்வர் அவர்கள் பங்கேற்ற குழந்தைகள் நாள் விழா 

2024

2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிகாகோ தமிழ்ச் சங்கத்தை சிறப்பித்தார்.

புகைப்படம்: மாண்புமிகு முதல்வர் அவர்கள் பங்கேற்ற “வணக்கம் அமெரிக்கா!” விழா