முப்பெரும் விழா
10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
சிகாகோ தமிழ்சங்கப் பொன்விழா
பேரவைத் தமிழ் விழா
சூலை 4-7, 2019
வட அமெரிக்காவின் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடாக “பத்தாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு”, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் “பொன்விழா”, வட அமெரிக்க தமிழர்கள் ஒன்று கூடும் “தமிழ் விழா” 2019 ஆம் ஆண்டு சூலை திங்கள் நடைபெற்றது. தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம், தமிழ்க் கணிமை ஆகியன குறித்து புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல் என்ற நோக்கத்தில் ஆய்வு மாநாடு நடைபெற்றது. உலகெங்கும் இருந்து 5000க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடி 100க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர் பெருமக்கள் தமது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து வரலாற்று நிகழ்வாக அமைந்தது. இந்த நிகழ்வை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையுடன் இணைந்து சிகாகோ தமிழ்ச் சங்கம் நடத்தியது.
இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருள்
“தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.”

