சிகாகோ புறநகர் நூலகங்களில் தமிழ் நூல்கள்:

தமிழன்பர்களுக்கு வணக்கம்:

தற்போதைய "பலகை" இதழில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் உதவி நாடி வந்துள்ளோம்.

பல நூறு தமிழ் குடும்பங்கள் வாழும் புறநகர் பகுதிகளில் உள்ள நூலகங்களில் தமிழ் நூல்களை காண முடிவதில்லை. அதே சமயம் பிற இந்திய மொழி நூல்களை காணமுடிகிறது. நூலக நிர்வாகத்தினரின் பதில், யாரும் கேட்கவில்லை என்பதே. யாரும் எதிர்காலத்தை அறிய இயலாது, ஆனால் அடுத்த தலைமுறைக்கு தமிழன் அடையாளம்  அவசியம். தன்னை அறிந்தோரே தடைகளை வென்று முன்னேறுவர்.

எங்களது நோக்கம் தமிழ் நூல்களை இங்குள்ள நூலகங்களில் கொண்டுவருவதே. மேலும் கதை மற்றும் விவாத குழுக்கள் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  தமிழறிவு வளர வகை செய்தல்.  

இதன் பொருட்டு முதல் கட்டமாக ஒரு கணக்கெடுப்பின் மூலம் சில விவரங்கள் திரட்ட உள்ளோம். இந்த விவரங்களை கொண்டு தமிழர்களின் எண்ணிக்கையை அறியவும், நூலக நிர்வாகிகளை அணுகவும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம்.

கீழே உள்ள தகவல் படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் பரிந்துரைகளை அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் வாழ்க!

நன்றி!

தொடர்புக்கு:

சந்திரகுமார் பெரியசாமி (586 549 1368)
ஸ்கந்தா ஸ்கந்தகுமார் (331 472 7081)

Tamil Library Books
 
Thamizh books may be categorized based by age group (below 7 yrs, 8 - 14 yrs, adults) and topics of interest (History, Science, Novels, Small Stories Collection, Poetry etc)