ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி

தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து, கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள், பொது மக்களின் உடமைகள், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட நிதி திரட்டுவது சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு முன் வந்துள்ளது. இந்த முயற்சியில் இணைந்து நம் தமிழ் உறவுகளின் துயர் துடைக்க உதவிட வேண்டுகின்றோம்.