தமிழர் திருநாள் – பொங்கல் விழா

தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!
– பாவேந்தர்

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. சிகாகோ தமிழ்ச் சங்கம் அறுசுவை விருந்துடன் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக ஆண்டு தோறும் இந்த விழாவினை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 1, 2025 நாம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை கொண்டாடவுள்ளோம். இந்த விழாவில் சுற்றம் நட்புமும் சூழ கலந்து கொள்வோம். வருக! வருக!

விழாவில் இடம் பெரும் நிகழ்ச்சிகள்:

  • குழு நடனம்
  • இன்னிசை விருந்து
  • மாபெரும் கும்மி 
  • பறை
  • கோலப்போட்டி
  • நெருப்பில்லா சமையல் போட்டி

Hemmens Auditorium
45 Symphony Way,
Elgin, IL 60120

நிகழ்ச்சி பதிவு (Event Registration)