இளைய தலைமுறையினரை தமிழ் மொழி,இலக்கியம், மரபு விழுமியங்களின் பால் ஈர்ப்பதும், அவர்களின் தனித் திறன்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் செய்வதும் “குழந்தைகள் நாள்” விழாவின் நோக்கமாகும். நம் அன்னைத் தமிழிற்கு அணிசேர்த்த அறிஞர்களை நாம் என்றும் நினைவு கூறும் வகையில், நூற்றாண்டுகளை காணுகின்ற அறிஞர்களுக்கு ஆண்டு தோறும் “தமிழ் அறிஞர்கள் நாள்” விழாவின் நோக்கமாகும். இந்த ஆண்டு, 2024, சிகாகோ தமிழ்ச் சங்கம் இவ்விரு விழாக்களையும் ஒன்றிணைத்து கொண்டாடவுள்ளது.
விழாவில் இடம் பெரும் நிகழ்ச்சிகள்:
- குழு நடனம்
- பேச்சுப் போட்டி
- ஓவியப் போட்டி
- தமிழ்த் தேனீப் போட்டி
- திருக்குறள் கதைகள் போட்டி
- கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி
- மாறுவேட நிகழ்ச்சி
- பட்டிமன்றம்
- இன்னிசை விருந்து
நாம் விழா எடுக்கின்ற தமிழ் அறிஞர்கள்:
- “முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம்
- “கவிராயர்” உடுமலை நாராயண கவி
- “சதாவதானி” செய்குத் தம்பி பாவலர்
- “கல்கி” கிருஷ்ணமூர்த்தி
